ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐயாவில் நயன்தாரா, தாமிரபரணியில் பானு போன்ற மலையாள நடிகைளை அறிமுகம் செய்த டைரக்டர் ஹரி, சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா என்ற மும்பை நடிகையை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்து வந்த எதிரி எண்-3 படம் கிடப்பில் போடப்பட்டதால் பூனம்பாஜ்வாவின் கோலிவுட் மார்க்கெட் சரிந்தது.
இந்நிலையில், ஆம்பள, ரோமியோ ஜூலியட் அரண்மனை-2 படங்களில் கேரக்டர் நடிகையாக மீண்டும் நடிக்கத் தொடங்கிய பூனம் பாஜ்வா, தற்போது புதிய படவேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார். அதோடு, அரண்மனை-2 படத்தை இயக்கிய சுந்தர்.சி அடுத்து தயாரித்து, நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார். அடுத்த மாதம் தொடங்கும் அப்படம், மலையாளத்தில் பிஜுமேனன் நடிப்பில் 2014-ல் வெளியான வெள்ளிமூங்கா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காம். அதில் மலையாள பதிப்பில் நிக்கி கல்ராணி நடித்த வேடத்தில் நடிக்கிறாராம் பூனம் பாஜ்வா. மலையாளத்தில் நிக்க கல்ராணி ஹோம்லியாக நடித்திருந்தபோதும், தமிழ்ப்பதிப்பில் பூனம் பாஜ்வாவை கிளாமராக நடிக்க வைக்கிறாராம் சுந்தர்.சி.,