மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகர்களில் குட்டி ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகர் என்று சொன்னால் அது விஜய் மட்டுமே. ரஜினிகாந்தை எப்படி குட்டீஸ்களுக்கும் அதிகமாகப் பிடித்ததோ அதே போல விஜய்யையும் குட்டீஸ்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்காகவேதான் விஜய் 'புலி' படத்தில் நடித்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்களின் தவறான அணுகுமுறையால் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் தன்னுடைய அடுத்த படமான 'தெறி' படத்திலும் குட்டீஸ்களைக் கவரும் விதத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பது போலத்தான் 'தெறி' டீசரும் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகளுடன் இருக்கும் த்ரிஷாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஆனால், த்ரிஷா இறந்துவிட அவரது மகளை அஜித் எப்படி தன்னை அப்பா போல பாவித்து பாசத்தைக் கொட்டுகிறார் என்பதுதான் ஆக்ஷன் கலந்த கதையாகச் சொல்லப்பட்டிருக்கும்.
'தெறி' டீசரைப் பார்க்கும் போதும் இந்தப் படமும் அப்பா, மகள் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவே தெரிகிறது. விஜய்யின் மகளாக நடித்துள்ள மீனாவின் மகள் நைனிகாவை டீசர் காட்டாமலே தவிர்த்திருக்கிறார்கள். கோலிவுட்டில் சொல்வது போல் 'தெறி' படமும் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தின் உல்டாவாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. இருந்தாலும் 'என்னை அறிந்தால்' அஜித்தையும் விஜய் தொடர்கிறாரோ என்ற சந்தேகமும உள்ளது.