இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
'வாணி ராணி' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். அதையடுத்து இப்போது என் இனிய தோழி, தாமரை, கேளடி கண்மணி, பிரியசகி போன்ற சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து வருகிறார். அவரிடத்தில், இன்னும் எந்தமாதிரியான வேடங்களில் எல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டபோது,
இதுவரை ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். அதில் பல கேரக்டர்கள் நேயர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. எனக்கும் திருப்தியாக அமைந்திருக்கிறது. என்றாலும், மாற்றுத்திறனாளி வேடங்களில் அடுத்தடுத்து நடிக்க வேண்டும். வித்தியாசமான பர்பாமென்ஸை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது.
குறிப்பாக, கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர்களது உலகத்திற்குள் சென்று இயல்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். மேலும், நான் ஒரு பெயின்டரும்கூட. அந்த வகையில், கண்பார்வையில்லாத ஒரு மாற்றுத்திறனாளியின் ஓவியம் வரைந்து அதற்கு பரிசு பெற்றிருக்கிறேன். அப்போது நான் நேரில் பார்த்த கண்பார்வை இல்லாதவர்களை மனதில் கொண்டு வந்து, தத்ரூபமாக அந்த படத்தை வரைந்தேன்.
அதனால், அப்படியொரு வேடத்தில் நடிக்கிறபோது என்னால், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ரோலுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறும் ஜெயராம், சேலஞ்சிங்கான வேடங்களிலும் நடித்து சின்னத்திரை உலகில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவதாக கூறுகிறார்.