ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் திறமைசாலி நடிகையான வித்யாபாலன் தனது பிறந்த நாள் விழா மற்றும் புத்தாண்டை கடல் கடந்து கொண்டாட திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் கஹானி நடிகைக்கு காலம் கைகொடுக்கவில்லை, துபாயில் புத்தாண்டை கொண்டாட நினைத்தவருக்கு விமான நிலையத்திலே பயங்கர வயிற்று வலி வந்துவிட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக விமான நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், வலி மேலும் அதிகரிக்க மும்பையில் உள்ள பிரபல ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். படப்பிடிப்புக்காக ஓயாது உழைத்து வருவதால், அவரது உடல்நிலையை பார்த்துக் கொள்ளாமலே விட்டுவிட்டாராம். கிட்னியில் கல் உருவாகி இப்படி புத்தாண்டை மருத்துவமனையில் கொண்டாட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டார் வித்யாபாலன். அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.