ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை 100 இந்திய பிரபலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் சல்மான் கான் இரண்டாமிடம் பிடித்துள்ளார். அமிதாப் பச்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அமிர்கான் 5வது இடத்திலும், அக்சய் குமார் 6வது இடத்திலும் உள்ளனர். தீபிகா படுகோனே 9வது இடத்திலும், ஹிர்திக் ரோஷன் 10வது இடத்திலும் உள்ளனர். கோலிவுட் நடிகர்களை பொறுத்தவரை தனுஷ்37வது இடத்தில் உள்ளார். கமல்ஹாசன் 46வது இடத்தில் உள்ளார். சந்தானம் 52வது இடத்திலும், நடிகை ஸ்ருதிஹான் 61வது இடத்திலும் உள்ளனர். ரஜினிகாந்த் 69வது இடத்தை பிடித்துள்ளார். சூரியாவுக்கு 71வது இடம் கிடைத்துள்ளது. ஆர்யாவுக்கு 80வது இடமும், பிரபுதேவாவுக்கு 88வது இடமும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு 39வது இடமும் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் தனுஷ், ஆர்யா சந்தானம் இடம்பிடித்துள்ள நிலையில், முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியார் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.