ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல மலையாள சேனலான ஏசியாநெட் ஆண்டுதோறும் சிறந்த காமெடித் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி காமெடி கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2015ம் ஆண்டுக்கான காமெடி கலைஞர்கள் விருது வழங்கும் விழாவை சமீபத்தில் கொச்சியில் நடத்தியது. இந்த விழாவில் மலையாள திரையுலக மற்றம் சின்னத்திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இதில் 2015ம் ஆண்டுக்கான சிறந்த காமெடி நடிகராக ஜெயராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த காமெடி நடிகையாக அனுஸ்ரீயும், காமெடி இயக்குனராக சித்திக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த காமெடி படமாக சந்த்ரேட்டன் எவிடையா என்ற படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெகதி ஸ்ரீகுமார் வாழ்நாள் காமெடி சாதனையாளர் விருது பெற்றர். இதே போல சின்னத்திரையில் சிறந்த காமெடியனாக கோட்டையம் ரஷீத்தும், நடிகையாக கன்யாவும் தேர்ந்தெடுக்கப்ட்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 29ந் தேதி மாலை 7 மணி முதல் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பாகிறது.