ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, காக்கி சட்டை என சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு நல்லதொரு ஓப்பனிங் கொடுத்தனர் ரசிகர்கள். அதனால் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க முன்னணி நிறுவனங்களே போட்டி போட்டன. இருப்பினும், அதிக ஆசைப்படாமல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதை தவிர்த்து ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்ற கொள்கையில் உறுதியாக இருந்த சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியிருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி இப்படத்தில் ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோரும் நடித்துள்ளனர். தாத்தா வேடத்தில் ராஜ்கிரணும், கிராமத்து வில்லனாக சமுத்திரகனியும் கலக்கி எடுத்திருக்கிறார்களாம்.
அதனால் ரஜினி முருகன் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது அப்படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிலிம்ஸ் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிக்கொண்டதால், ஏற்கனவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வந்தனர். ஆனால், வருகிற 21-ந்தேதி அப்படம் கண்டிப்பாக தியேட்டருக்கு வந்து விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருகிற 21-ந்தேதியும் ரஜினிமுருகன் திரைக்கு வரவில்லை என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக, விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, விஜயசேதுபதியின் நானும் ரவுடிதான், வாலிப ராஜா ஆகிய படங்களே அன்றைய தினத்தில் திரைக்கு வரும் என்று தெரிகிறது.