ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் 18ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் தற்போது பதவியில் இருக்கும் அணியும், அந்த எணிக்கெதிராக நாசர் தலைமையில் விஷால் முன்னிலைப்படுத்திக் கொண்டுச் செல்லும் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. கடந்த வாரம் விஷால் அணியினர் கூட்டிய கூட்டத்தில் பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அது சரத்குமார் அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் தேதி நெருங்க நெருங்க விஷால் அணியினருக்கான பலம் கூடி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் விஷால் அணியை தோற்கடிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு ஆதரவளிக்கும் என்று அதன் தலைவர் தாணு அறிவித்திருப்பதில் கூட மிகப் பெரும் பின்னணி அரசியல் ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள்.
விஷால் அணியினர் ஊர் ஊராகச் சென்று வாக்குகளைச் சேகரித்துக் கொண்டிருக்க, சரத் அணியினரோ அவர்கள் அளவிற்கு பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருப்பதன் பின்னணியிலும் சில காரணங்கள் ஒளிந்திருக்கின்றன என்கிறார்கள். நாளை சரத்குமார் அணியினர் கூட்டியுள்ள கூட்டத்தில் அதற்கான காரணங்கள் நேரடியாக வெளிப்படும் பாருங்கள் என்கிறார்கள் கோலிவுட்டில் உள்ள சிலர்.
இப்படி ஒரு போட்டி நிறைந்த, பரபரப்பான சூழலில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்து பல வருடங்களாகிவிட்டது. தேர்தல் நெருங்குவதற்குள் பல திருப்புமுனைகளும், சில நாடகங்களும் அரங்கேறவும் வாய்ப்புள்ளது என்றே பலரும் சொல்கிறார்கள். நிஜமான அரசியல் நாடகத்தை இந்த சினிமா அரசியல் நாடகம் முறியடிக்கப் போகிறது, பொறுத்திருந்து பாருங்கள் என விஷயமறிந்தவர்கள் சஸ்பென்ஸுடன் முடிக்கிறார்கள்.