ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா,பிரகாஷ் ராஜ் நடிகைகள் கார்த்திகா, பியா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோ படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகின்றது. இப்படம் தெலுங்கு நடிகர் நர ரோஹித் நடிப்பில் வெளியான பிரதிநிதி எனும் தெலுங்கு படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ல் இயக்குனர் பிரசாந்த் மாதவா இயக்கத்தில் டோலிவுட்டில் வெளியான பிரதிநிதி படம் திகிலூட்டும் அரசியல் கதைக் களத்தில் அமைந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இப்படதையே கோ 2 என்ற பெயரில் இயக்குனர் சரத் மாதவா இயக்கி வருவதாக பேச்சு அடிபடுகின்றது. சரத் மாதவா இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் பில்லா 2 படத்திலும் உன்னைப்போல் ஒருவன் படத்தின் தெலுங்கு பதிப்பான ஈ நாடு படத்தில் நடிகர் கமலஹாசனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கோ 2 திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்புகளில் உள்ளது. அக்டோபர் இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என தெரிகிறது.