ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''பிரேம் ரதன் தன் பயோ''. சல்மான் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். சூரஜ் பர்ஜாத்யா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சல்மான், என்னிடம் நிறைய நடிகர்கள், இந்த இயக்குநரின் படத்தில் நான் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரையில் இந்தியாவின் சிறந்த இயக்குநரான சூரஜ் பர்ஜாத்யா படத்தில் நான் நடித்துள்ளேன். அதுவும் ஒருமுறை அல்ல மூன்று முறை அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரைப்போன்று யாரும் படம் இயக்க முடியாது என்று கூறியுள்ளார்.
''பிரேம் ரதன் தன் பயோ'' படம் நவ., 12ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.