ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சரித்திர ஃபேன்டஸி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முன் பதிவு பல இடங்களில் ஒரு வாரத்திற்கு முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு படத்தின் நாயகனான விஜய் அவருடைய மனைவி, மகன், மகளுடன் 'புலி' படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் படம் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். குறிப்பாக அவருடைய மகன், மகள் இருவரும் படத்தை வெகுவாக ரசித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஒரு ஃபேன்டஸி படத்தில் விஜய் நடிப்பதற்கு அவருடைய மகன்தான் காரணம் என்றும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.
விஜய்க்கு ஏற்கெனவே சிறுவர், சிறுமியர் பலர் ரசிகர்களாக உள்ளனர். விஜய்யின் நடனமும், நகைச்சுவை நடிப்பும், ஆக்ஷன் நடிப்பும் அவர்களுக்கு வெகுவாகப் பிடிக்கும். இந்த 'புலி' படத்தில் அவை இன்னும் அதிகம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளுடன், குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான சுவாரசியமான படமாகத்தான் 'புலி' உருவாகியுள்ளதாம். இன்னும் ஒரு வாரத்திற்கு காலாண்டு விடுமுறை என்பதால் அனைவரும் குடும்பத்தினருடன் வந்து ரசிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், அப்படி அவர்கள் வந்தால் படம் ஒரு வாரத்திலேயே வசூலை அள்ளும் என்றும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.