Advertisement

சிறப்புச்செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் மட்டுமே...!

22 செப், 2015 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-the-real-super-star

இந்தியத் திரையுலகில் நிஜமான சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மட்டுமே என்று தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே ஒத்துக் கொள்வார். ஆனால், இங்குள்ள சிலரோ சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அமிதாப் போல தன் வயதுக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க 'கபாலி' படம் மூலம் இப்போதுதான் ரஜினிகாந்த் முடிவெடுத்திருக்கிறார். இருந்தாலும், அடுத்து 'எந்திரன் 2' படத்திலேயே அவரை தீபிகா படுகோனேவுடனோ அல்லது வேறு ஏதாவது இளம் நடிகையுடனோ டூயட் பாட வைத்துவிடுவார்கள். ஆனால், அமிதாப் பச்சன் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே தன்னுடைய வயதுக்குரிய கதாபாத்திரத்தில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார்.


கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிப்பதை அமிதாப் எப்போதோ குறைத்துக் கொண்டார். அமிதாப்பின் கடந்த பத்து வருடங்களைப் பார்த்தால் அவருடைய கதாபாத்திரங்களும் நடிப்பும் இந்தியாவில் உள்ள வேறு எந்த நடிகரும் தொட முடியாத அளவிற்கு உச்சத்தில் இருக்கும். இதை இந்தியாவில் உள்ள அனைத்து விமர்சகர்களும், இயக்குனர்களும் ஒத்துக் கொள்வார்கள். அதனால்தான் அமிதாப்புக்கு டிவிட்டரில் 1,70,00,000 தொடர்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால், ரஜினிக்கு உள்ள தொடர்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 23,00,000 மட்டுமே. இந்த ஒரு விஷயத்திலாவது அமிதாப்பை ரஜினியால் நெருங்க முடியுமா என்பது சந்தேகம்தான்.


நேற்றுதான் அமிதாப்பைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சத்தைத் தொட்டது. “17 மில்லியன் தொடர்பாளர்கள், என்னுடைய விரிவுபட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி,” என தன்னைத் தொடர்பவர்களை தன் குடும்பத்தில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார் அமிதாப். “என் விரிவுபட்ட குடும்பத்தில் இல்லாத, இனி ஆகப் போகிற அனைவருக்கும் நன்றி. என்னைப் பாராட்டுபவர்களுக்கும் நன்றி, என்னைத் தவறாகச் சொல்பவர்களுக்கும் நன்றி. ஆசீர்வதிக்கப்பட்டதற்கும் மேலே இருக்கிறேன்,” என 17 மில்லியன் சாதனையைத் தொட்டதைப் பற்றி அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.


சூப்பர் ஸ்டார் என்பதற்கும் மேல் ஒரு புது வார்த்தையைக் கண்டுபிடித்து அந்தப் பட்டத்தை அமிதாப்புக்குக் கொடுத்தாலும் அது அவருக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in