மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ அனில் கபூரின் மகள் சோனம் கபூர். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் இவரது புதியபடமான ''பேட்டில் பார் பிட்டோரா'' படம் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் நடிகை சோனம் கபூர் நடிப்பதுடன் தயாரிக்கவும் இருக்கிறார். இப்பற்றி சோனம் கபூர் கூறியிருப்பதாவது... ஆயிஷா படத்திலேயே நான் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் என் பெயர் அதில் வராது. எனது சகோதரி ரேகா தான் என்னை தயாரிப்பாளராக மாறச் சொன்னார். இந்தப்படத்தின் டைட்டிலில் தயாரிப்பாளர் பெயரில் எனது பெயரும் இடம்பெறும். தயாரிப்பு பற்றி அனைத்து விஷயங்களையும் நான் கற்று கொள்வேன். இந்தப்படம் தவிர இன்னும் ஒரு படத்தையும் தயாரிக்க எண்ணியுள்ளேன். அடுத்தாண்டு ''பேட்டில் பார் பிட்டோரா'' படம் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.