ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. திரைப்படம் தொடர்பான பிரமாண்ட பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். சினிமாவிலோ, சீரியலிலோ நடிக்கவே மாட்டேன் என்று கூறிவந்த ரம்யா. சமீபத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாகவும் ஆனார்.
தற்போது ரம்யா ரேடியோ ஜாக்கியாக அவதாரம் எடுத்திருக்கிறார். பிக் எப்.எம்மில் பிக் பிப்டி பிப்டி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ரம்யாவுடன் பேசலாம். "எனக்கு இது புதிய அனுபவம். கொஞ்சநாளைக்கு தப்பும் தவறுமாகத்தான் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னுடன் பேசுங்கள், மகிழ்ந்திருங்கள்" என்று தனது சமூக வளைத்தளத்தில் கூறியிருக்கிறார் ரம்யா. சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்த ரம்யா, திடீரென ரேடியோ நிலையத்தின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தன்னை சுருக்கி கொண்டது எல்லோருக்குமே சின்ன அதிர்ச்சிதான்.