ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தில், தேவர் மகன் படத்தி்ல் இடம்பெற்றிருந்த "இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி" ரீமிக்ஸ் பாடலும் இடம்பெற உள்ளது.
கமல்ஹாசனின் எழுத்து மற்றும் தயாரிப்பில், 1992ம் ஆண்டில் வெளியான படம் தேவர் மகன். இளையராஜா இசையிலமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனபோதிலும், இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி" அதையும் தாண்டி, பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்தது, தற்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படத்திற்கு இஞ்சி இடுப்பழகி என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல்வரியே, படத்திற்கு பெயராக மட்டும் அமைத்திராமல், படத்தில் நாயகன், நாயகி, அப்பாடலை பார்ப்பதோடு மட்டுமல்லாது, அந்த பாடலின் காட்சியில் இருந்தவாறே, பாரம்பரிய உடையில், ஆர்யாவும், அனுஷ்காவும் இருப்பதுபோன்று காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாம்....
படத்தின் கதைக்கு ஏற்ப ஹீரோக்களே, தங்களது உடல் எடையை கூட்டி, குறைந்து வந்த நிலையில், முதல்முறையாக, ஹீரோயின், படத்தின் கதைக்காக, தனது உடல் எடையை, ஒரே படத்திற்காக 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாது, மீண்டும் உடல் எடையை குறைத்து அனுஷ்கா, இப்படத்தில் புதுமை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.