ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் நடிக்க வந்து பத்து வருடங்களாகியும் இன்னமும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. எத்தனையோ கிசுகிசுக்கள், காதல் பஞ்சாயத்துகள் என பல விஷயங்களுக்கு மத்தியிலும் நயன்தாராவின் மவுசு மட்டும் குறையாமலே உள்ளது. இன்னமும் அவருடன் ஜோடியாக நடிக்க பல இளம் நடிகர்கள் கூட ஆசைப்படுகிறார்கள். தற்போது கூட கைவசம் நான்கைந்து படங்களை வைத்துக் கொண்டு பிஸியாகவே இருக்கிறார் நயன்தாரா.
ஆனால், அவருடைய கடந்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்து அவருடைய வெற்றிப் பாதைக்கு கொஞ்சத் தடைக்கல்லாகவே இருந்தது. நயன்தாரா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் 'ராஜா ராணி'. அதற்கடுத்து வெளிவந்த “ஆரம்பம், இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே, நண்பேன்டா, மாஸ்” ஆகிய ஐந்து படங்களும் தோல்விப் படங்களின் வரிசையில்தான் சேர்ந்தது. தொடர் தோல்விகளால் நயன்தராவின் ராசியைப் பற்றியும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.