ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து திரைக்கு வரவிருக்கும் சரித்திர திரைப்படம் ருத்ரமாதேவி. 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசத்தில் காகதீய வம்ச ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து டோலிவுட்டில் தயாராகி வரும் ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவி ராணியாக நடித்து உள்ளார். நாயகியை மையப்படுத்திய இந்த படத்தில் அனுஷ்காவுடன் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.