சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் பஸ்ட் லுக்கை நாகார்ஜுனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். . அதே போல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டின் மறைந்த மூத்த நடிகரும் அகிலன் தாத்தாவுமான நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் பிறந்த தினமான செப்படம்பர் 26 ஆம் தேதி அகில் நடித்துள்ள படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கவுள்ளனர். இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.