ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலுவுக்குப் பிறகு கோலிவுட்டின் முன்னணி காமெடியன் ஆனார் சந்தானம். பெரிய அளவில் பாடிலாங்குவேஜ் இல்லாமல் வெறும் டைமிங் காமெடியை வைத்து நம்பர்-ஒன் இடத்தை பிடித்தார். அவரது காமெடியை இளவட்ட ரசிகர்கள் பெரிதாக ரசித்ததால், முன்னணி ஹீரோக்களே படம் முழுக்க சீன் பை சீன் சந்தானமும் தங்களுடன் வந்தால் படம் போரடிக்காமல் இருக்கும் என்று அவருடன் கூட்டணி அமைத்துக்கொண்டனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் தனது காமெடிக்காகவே பல படங்கள் ஓடுகிறது என்பதை அறிந்த சந்தானத்துக்கு, தன்னை வைத்து பல ஹீரோக்கள் மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ளும்போது, ஏன் தானே ஹீரோவாக நடிக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக டிரையல் பார்த்தார். அந்த படம் ஹிட்டாக அமைந்தது. விளைவு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர், அடுத்த படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு அடுத்தபடியாக வளர்ந்து கொண்டிருந்த சூரி இப்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடியனாகி விட்டார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், சந்தானம் காமெடியில் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சில படங்களின் டைட்டிலில் போட்டும் வந்தனர். ஆனால், இப்போது அவர் ஹீரோவாகி விட்டதால், அந்த பட்டத்தை சூரிக்கு கொடுக்க சில இயக்குனர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். தற்போது அவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள சில படங்கள் ரிலீசாகும்போது அப்படங்களின் டைட்டிலில் சூரியின் பெயருக்கு முன்பு இந்த காமெடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.