ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷின் ஆரம்ப காலப் படங்கள் மிகவும் விளையாட்டாகவே இருக்கும். காதலைத் தவிர அந்தப் படங்களில் வேறொன்றும் பெரிதாக இருக்காது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அதற்கும் கீழாகவே தன்னுடைய படங்களின் கதாபாத்திரங்கள் இருக்கும்படி அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் படங்களை ரசிக்கும் ரசிகர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்துதான் இன்று ஒரு உச்ச நிலையில் இருக்கிறார் தனுஷ்.
அவருடைய 'துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையைக் கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பரட்டை என்கிற அழகுசுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி” படங்கள் வரை நடுத்தரக் குடும்பத்துப் பையனாகவோ, அல்லது ஏழைப் பையனாகவே மட்டுமே நடித்து பி அன்ட் சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் தனுஷ். அதன் பின்தான் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டார்.
இப்போது இன்னுமொரு தனுஷாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் கதாபாத்திரத்தை டிரைலரில் பார்த்தாலே என்ன மாதிரியானது என்று புரிந்து கொள்ளலாம். இந்தப் படங்கள் எல்லாம் அப்படியே ஆரம்ப கால தனுஷையே நினைவுபடுத்துகின்றன என்றால் அது மிகையில்லை. தனுஷுக்கும், ஜி.விக்கும் இடையில் உருவான சண்டைக்குக் கூட இதுவும் ஒரு பின்னணி காரணமாக இருக்குமோ?.