மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் தொடர்ந்து பங்குபெற்று வந்த காபி வித் டிடி நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் பேட்டி கண்டு வந்தது கலகலப்பாக இருந்ததால் அதற்கென பெரிய நேயர்கள் வட்டமே உருவானது. அதோடு, வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தாலும், இந்த காபி வித் டிடி நிகழ்ச்சியை தனித்துவமாக நடத்தி வந்தார் திவ்யதர்ஷினி. அதோடு, விஜய் டிவி நடத்தி வந்த சினிமா விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ஜனரஞ்சகமான நிகழ்ச்சி தொகுப்பாளினியாக திகழ்ந்து வந்தார் அவர்.
இந்த நிலையில், அவர் நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி சமீபத்தில் முற்று பெற்றது. அதனால் அதன்பிறகு திவ்யதர்ஷினியை விஜய் டிவியின் வேறு நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லை. அதனால் அவரை அந்த டிவி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி விட்டது போலவும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக சேனலில் இருந்து விலகி இருப்பது போலவும் கடந்த சில வாரங்களாக பலவிதமான செய்திகள் வெளியாகின.
ஆனால், உண்மை நிலவரம் பற்றி அறிய விஜய் டிவி வட்டாரத்தை விசாரித்தபோது, திவ்யதர்ஷினிக்கும், விஜய் டிவிக்குமிடையே எந்த பிரச்சினையும் இல்லை. அவர் இப்போதும் விஜய் டிவியில்தான் இருக்கிறார் என்கிறார்கள். மேலும், தற்போது அவரது காலில் அடிபட்டிருப்பதால் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிறார்கள். அதோடு, கூடியசீக்கிரமே இன்னொரு புதிய நிகழ்ச்சி மூலம் திவ்யதர்ஷினியை விஜய் டிவியில் வழக்கம்போல் நேயர்கள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.