ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் ரோஷன், ஐரின், காவ்யா நடிக்கும் படம் வெள்ளை உலகம். இதனை பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய உதயா ராமகிருஷ்ணன் இயக்கி உள்ளார். அப்புக்குட்டி, தென்னவன், சம்பத்ராம், பசங்க சிவகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அருண் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெய்கிரீஷ் இசை அமைத்துள்ளார். சுசில் குமார் ஜெயின் தயாரித்துள்ளார்.
"இன்றைய காலச் சூழலில் காதலைகூட அரசியலாக்கி ஆதாயம் தேடுகிறார்கள். இனி வரும் காலத்தில் அரசில்வாதிகளிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டுதான் காதலிக்கவே முடிம் என்கிற நிலை வரலாம். இந்த கசப்பான உண்மையைத்தான் படமாக எடுத்திருக்கிறோம். அருகருகே உள்ள இரண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பதும் அவர்கள் காதலில் ஜாதியும் அரசியலும் எப்படி விளையாடுகிறது என்பதை துணிச்சலுடன் சொல்கிறோம்.