மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பல மொழிகளில் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு மொழியில் பயன்படுத்திய ட்யூனை இன்னொரு மொழியில் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சிம்பு நடிக்கும் 'வாலு' படத்தில் பயன்படுத்திய ட்யூனை 'பண்டக செஸ்கோ' என்ற தெலுங்குப்படத்திற்கு பயன்படுத்தினார் எஸ்.எஸ். தமன். அது தற்போது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
வாலு படத்திற்காக எஸ்.எஸ்.தமனும், சிம்புவும் இணைந்து 'யூ ஆர் மை டார்லிங்' என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் உட்பட 'வாலு' படத்தின் பாடல்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில், சிம்பு உடன் இணைந்து பாடியுள்ள பாடலின் அதே ட்யூனை, தான் இசை அமைத்து வந்த தெலுங்கு படம் ஒன்றிலும் பயன்படுத்தியுள்ளார் எஸ்.எஸ்.தமன்.
கோபிசந்த் இயக்கத்தில் ராம், ரகுல் ப்ரீத் சிங் இனைந்து நடித்துள்ள 'பண்டக செஸ்கோ' என்ற படத்தில்தான் 'வாலு' பட பாடல் ட்யூன் இடம் பெற்றுள்ளது. இப்படம் நாளை அதாவது 29-5-15 அன்று வெளியாகிறது. சிம்பு நடித்த வாலு படம் எப்போது வெளியாகும் என்று தெரியாதநிலையில் 'பண்டக செஸ்கோ' தெலுங்குப்படம் முந்திக் கொண்டது. ஒருவேளை எதிர்காலத்தில் வாலு படம் வெளியானால், அதை தெலுங்கில் டப் செய்யும்போது 'பண்டக செஸ்கோ' படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடிப்பது நிச்சயம்.