ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெகா ஹிட் கொடுத்த மனம் படத்தில் பிரபல நடிகை சமந்தா கிங் நாகர்ஜுனின் அம்மாவாக வித்தியாசமான ரோலில் நடித்து பாராட்டுதல்களை பெற்றார். அவர் தற்போது பிரபல மூத்த நடிகரான விக்டரி வெங்கடேஷுக்கு மகளாக நடிக்க இருக்கிறாராம். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோனே அப்பா-மகளாக நடித்த பிக்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது நினைவிருக்கலாம். அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் வெங்கடேஷும், சமந்தாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது அமிதாப் பச்சன் வேடத்தில் வெங்கடேஷும், தீபிகா படுகோனே வேடத்தில் சமந்தாவும் நடிக்க இருக்கிறார்களாம். பிக்கு மிகச்சிறந்த குடும்ப பாங்கான பொழுதுபோக்கு படமாகும். குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்த படமாகும். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் சமந்தா சன் ஆப் சத்யமூர்த்தியிலும், வெங்கடேஷ் உடன் கோபால கோபால என்ற படங்களில் நடித்தது நினைவிருக்கலாம்.