ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் அடுத்த வாரம் 29ம் தேதி வெளியாகும் என்று இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். நேற்று வரை விளம்பரங்களில் மாஸ் என்று மட்டுமே இடம் பெற்று வந்த படத்தின் தலைப்பு இன்று முதல் மாஸ் என்கிற மாசிலாமணியாக மாறிவிட்டது. அதில் மாஸ் என்பதை மட்டும் பெரிய எழுத்துக்களில் போட்டுவிட்டு, என்கிற மாசிலாமணி என்பதை மட்டும் அதற்குக் கீழே சிறிய எழுத்துக்களில் போட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் படத்தின் பெயர் மாஸ் என ஆங்கிலத்தில் உள்ளதே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த வெங்கட் பிரபு அது மாசிலாமணி என்பதன் சுருக்கம் என்றார். ஆனால், இன்று திடீரென படத்தின் பெயரை மாஸ் என்கிற மாசிலாமணி என்று மாற்றிவிட்டனர்.
இதற்கு முன்பும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து கார்த்தி நடித்து வெளிவந்த ஆன் இன் ஆல் அழகுராஜா என்று இருந்த பெயரை அதன் பின் அழகுராஜா என வெளியீட்டின் போது மாற்றிவிட்டனர். அப்போது நீளமாக இருந்த பெயரை சுருக்கினர், இப்போதே சுருக்கமா இருந்த பெயரை நீளமாக்கியிருக்கின்றனர்.