ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சலீம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் அக்ஷா . முஷாபர் என்ற இந்திப் படத்தில் அறிமுகமாகி கோல் என்ற மலையாளப்படத்தில் நடித்து அதன் பிறகு தெலுங்கில் நிலைத்து நின்றவர். தெலுங்கில் 10 படங்கள் வரை நடித்து விட்டு சலீம் மூலம் தமிழுக்கு வந்தார். சலீம் ஹிட்டானாலும் ஆக்ஷாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தற்போது பெங்கால் டைகர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹீரோ இல்லாத இட்லி என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படம் ஒரு பிரச்னையில் சிக்கி கொண்ட பேத்தியை 3 பாட்டிகள் காப்பாற்றுவது பற்றிய டம். அந்த பாட்டிகளாக சரண்யா, கோவை சரளா, கல்பனா நடிக்கிறார்கள். பேத்தியாக நடிப்பவர் அக்ஷா. ஹீரோ இல்லாவிட்டாலும் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷத்தில் இருக்கிறார் அக்ஷா. வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் இயக்குகிறார். அப்பு மூவீஸ் சார்பில் பாபு தூயவன், ஜி.கார்த்திக் தயாரிக்கிறார்கள்.