சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் கனவு காவியமான பாகுபலியின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அந்த படத்தின் தேவசேனா லுக் நாளை வெளிவருகிறது. அந்த கதாப்பத்திரத்தில் பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாகுபலியின் முதல் பாகத்தில் கொஞ்சம் தான் வருகிறாராம். இரண்டாம் பாகத்தில் தான் முழுவதுமாக வருகிறார். அதாவது அவர் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாவார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் போஸ்டரில் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ் மிகப்பிரமாண்டமான அருவி பின்னணியில் சிவலிங்கத்தை தனது தோளில் சுமந்து வருகிறார். அதுவும் அவர் தனது ஆஜானுபாகுவான உடல் அமைப்பில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.மொத்தத்தில் இந்த படம் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்து இயக்குனர் ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் மகிழ்ச்சி தருகின்றது. தேவசேனாவின் லுக் மே 6யில் வெளியாகும்..என்று குறிப்பிட்டு உள்ளார்.