மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய சைவம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான டாகுடு மொத்தா டண்டகோ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சைவம் படத்தை தெலுங்கில் இயக்குநர் மலிநேனி இயக்கியுள்ளார். தமிழில் நடிகர் நாசர் நடித்த வேடத்தில் தெலுங்கில் பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழில் சைவம் படத்தில் நடித்த சாரா நடித்துள்ளார். இப்படத்தை பார்த்து மிகவும் பிடித்துப் போனதால் ராமோஜி ராவ் இப்படத்தை தெலுங்கில் தயாரிக்க முன் வந்தார். ஜனசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தை வெளியிடும் டில் ராஜு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கணிசமான திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்.