Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவன் சங்கர்ராஜாவினால் மாஸ் படத்துக்கு பிரச்சனை

17 ஏப், 2015 - 17:33 IST
எழுத்தின் அளவு:
Mass-release-delayed-due-to-Yuvan-Sankar-raja

வெங்கட் பிரபு இயக்கத்தில் நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு கதாநாயகிகள் உடன் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. சமுத்திரக்கனி, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மாஸ் படத்தை முதலில் மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அதற்குள் பட வேலைகள் முடிவடையாது என்பதால் தற்போது ரிலீஸ் தேதியை மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.


சில தினங்களுக்கு முன்புதான் டப்பிங் பணிகள் முடிவடைந்தன என்றும், தற்போது மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மற்றும் டீஸரை உருவாக்கும் பணியில் வெங்கட்பிரபு பிஸியாக இருக்கிறார் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. மாஸ் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அவருக்கு தெரியாமலே தமனை வைத்து ஒரு பாடலை பதிவு செய்து படப்பிடிப்பும் நடத்தினார்கள். அதனால் யுவன்சங்கர்ரராஜா கடுப்பானதாக சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாடலிசையின் ஃபைனல் அவுட்புட்டான டாட்டைக் கொடுக்காமல் இன்னும் இழுத்தடிக்கிறாராம் யுவன். டாட் கிடைத்து சிடியை தயார் பண்ண குறைந்தபட்சம் ஒரு மாதம் அவகாசம் கேட்கிறதாம் ஆடியோ கம்பெனி. ஒருவேளை இன்றைக்கு யுவன்சங்கர்ராஜா டாட் கொடுத்தாலும் ஆடியோ சிடி தயாராக மே 17 தேதி ஆகிவிடும். எனவே இதன் காரணமாக மாஸ் படம் மே 15 அன்று வெளிவராது என்று அடித்துச் சொல்கிறார்கள். மே 22 அல்லது மே 29 தேதியில்தான் மாஸ் வெளியாகும் என ஆடியோ நிறுவன வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மாஸ் படத்துக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மே 15 அன்று யுடிவியின் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்துக்கு ரூட்டு க்ளியர் ஆகிவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in