ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி திரையில் தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் குத்துசண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்று படம் பாலிவுட்டில் வசூலில் சக்கை போடு போட்டது. அது மட்டுமல்லாது விமர்சகர்களிடமும் இப்படம் பாராட்டைப் பெற்றது. இப்படங்களைத் தொடர்ந்து கிரிகெட் வீரர்கள் அசாருதீன், டோனி உட்பட பல வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் , தற்போது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருமாறவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் சானியா மிர்சாவாக இந்தி திரையின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சானியா மிர்சா தற்போது தனது சுயசரிதையை எழுதி வருகின்றார். அதன் அடிபடையில் இப்படம் அமையும் என்றும் தெரிகிறது .Against All Odds என்ற தலைப்பில் உருவாகும் இந்த புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளது.