ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கத்தி படத்திற்கு பிறகு இந்தியில், அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய ரோலில் நடிக்கிறார். தமிழில் வௌிவந்த மௌனகுரு படத்தை தான் இந்தியில் சோனாக்ஷிக்கு ஏற்றபடி கதையை மாற்றி படமாக இயக்குகிறார் முருகதாஸ். இப்படத்திற்கு சோனாக்ஷி அதிக மெனகெட்டு நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை தபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்தபோது தபு வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லையாம். இதுஒருபுறம் இருக்க தபு சில நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்ததாகவும், பின்னர் திடீரென அவர் விலகிவிட்டதாகவும் ஒரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் இதனை முற்றிலுமாக அகிரா படக்குழு மறுத்துள்ளது.