சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தெலுங்கு திரையில் ஹார்ட் அட்டாக் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளதை சமீபத்தில் நடிகர் நிதின் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். தெலுங்கு திரையில்விட்ட தனது இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகை சார்மி நடிக்கும் ஜோதிலக்ஷ்மி படத்தை இயக்குநர் பூரி ஜகன்நாத் தற்போது இயக்கி வருகின்றார்.
இப்படத்தை முடித்த பின்னர் அடுத்து, இயக்குநர் பூரி ஜகன்நாத் நடிகர் நிதின் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குடும்பாங்கான கதைகளை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் பூரி ஜகன்நாத் நடிகர் நிதின் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்திற்கு மா அம்மா சீதாமாஹாலக்ஷ்மி என்று பெயர் வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. விரைவில் இதனை படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.