ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டில்லியில் மருத்துக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் காம வெறியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ஒரு படம் வெளியாகிறது. ஒரு ஆங்கில பெண்மணி எடுத்த இந்தியாவின் மகள் என்ற டாக்குமெண்டரி படம் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பேய் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் பேயாக வந்து தன்னை சீரழித்தவர்களை பழிவாங்குகிற மாதிரி கதை பண்ணியிருக்கிறார்கள்.
இதில் பூனம் கவுர் மருத்துவ கல்லூரி மாணவியாகவும், பேயாகவும் நடித்துள்ளார், ஜான் மகேந்திரன், மணிகண்டன் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார், அபுஷா ஒளிப்பதிவு செய்கிறார். மதிவாணன் இயக்குகிறார். களவாணி படத்தை தயாரித்த த்ரிஷாவின் முன்னாள் மானேஜர் எஸ்.நசீர் தயாரிக்கிறார். மே மாதம் திரைக்கு வருகிறது.