Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மார்ச் மாத திரைப்படங்கள் - ஒரு பார்வை!

30 மார், 2015 - 15:27 IST
எழுத்தின் அளவு:
Tamil-movie-released-in-March-2015

2015ம் ஆண்டின் முதல் காலிறுதி மாதங்களின் முடிவில் சுமார் 60 படங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி மாதத்தில் 17 திரைப்படங்களும் பிப்ரவரி மாதத்தில் 12 திரைப்படங்களும் மார்ச் மாதத்தில் 31 திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. கடந்த மாதத்தை விட இந்த மாதம் படங்களின் வெளியீடு இரு மடங்காக அதிகரித்துள்ளது.


மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு படம் என்ற வீதத்தில் படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் அதிக பட்சமாக மார்ச் 20ம் தேதி ஒரே நாளில் 10 படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு பக்கம் பள்ளித் தேர்வுகள் ஆரம்பமான மாதம், மற்றொரு பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவை இருந்ததால் மார்ச் மாதத்தில் படங்கள் வெளிவருவது குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், வழக்கத்தை விட வெளியான படங்களின் எண்ணிக்கை உயர்வாக இருந்து திரையுலகத்தினரையே ஆச்சரியப்பட வைத்தது.


மார்ச் மாதத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றும், பெரிய இயக்குனர்களின் படங்கள் என்றும் அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் பல புதியவர்களின் படங்களும், அதிக பாப்புலர் இல்லாத நட்சத்திரங்களின் படங்களுமே அதிகமாக வெளிவந்தது.


மார்ச் மாதம் வெளியான படங்களின் பட்டியல்...




மார்ச் 6


என் வழி தனி வழி


எனக்குள் ஒருவன்


ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை


மகா மகா


ரொம்ப நல்லவன்டா நீ


சேர்ந்து போலாமா


தொப்பி


மார்ச் 13


ஐவராட்டம்


கதம் கதம்


இவனுக்கு தண்ணில கண்டம்


மகாபலிபுரம்


ராஜதந்திரம்


சொன்னா போச்சு


தவறான பாதை


வானவில் வாழ்க்கை


மார்ச் 20


ஆயா வட சுட்ட கதை


அகத்திணை


இரவும் பகலும் வரும்


கடவுள் பாதி மிருகம் பாதி


கால கட்டம்


கள்ளப்படம்


மூச்


பட்ற


திலகர்


வெத்து வேட்டு


மார்ச் 27


சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா


மனதில் ஒரு மாற்றம்


நதிகள் நனைவதில்லை


சரித்திரம் பேசு


வலியவன்


மார்ச் மாதத்தில் வெளியான படங்களில் ஓரளவுக்குத் தெரிந்த முகங்களின் படங்கள் என்று பார்த்தால் சித்தார்த் மற்றும் ஜெய் மட்டுமே. சித்தார்த் நடித்து வெளிவந்த எனக்குள் ஒருவன் திரைப்படம் கன்னடத்தில் மூவீ ஃபண்டிங் மூலம் எடுக்கப்பட்டு மிகப் பெரும் சாதனை படைத்த லூசியா படத்தின் ரீமேக்காக இங்கு வெளியானது. எந்த ரசிகர்களையும் திருப்திப்படுத்தாமல் எனக்கென்ன வந்தது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட படம் போல ஒரு சிறந்த கன்னடப் படத்தை தமிழில் மாபெரும் தோல்விப் படமாகக் கொடுத்துவிட்டனர்.


எங்கேயும் எப்போதும் என்ற பாராட்டுப் பெற்ற படத்தை இயக்கிய சரவணன், அந்தப் படத்தில் நடித்த ஜெய் ஆகியோர் மீண்டும் இணைந்த வலியவன் படம் ரசிகர்களுக்கு வலியைத்தான் அதிகம் கொடுத்துள்ளது என கடந்த இரண்டு நாட்களிலேயே படத்தைப் பற்றி சொல்லிவிட்டனர்.


ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகிலும் ஒரு புதிய பாதையைக் காட்டியது. திரையரங்குகளில் வெளியாகாமல், தொலைக்காட்சிகளிலும் வெளியாகாமல் நேரடியாக வீடுகளுக்கே சினிமாவைக் கொண்டு போய்ச் சேர்க்கும் விதத்தில் டிவிடி மூலம் வௌியிடப்பட்டது. இந்த முறைக்கு ஒரு பக்கம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும் திரையுலகத்தில் இருக்கும் சிலர் எதிர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் சேரன் நடித்த ஆடும் கூத்து படமும் தனியார் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மிஷ்கின் உதவியாளர் வடிவேலு இயக்கிய கள்ளப்படம் வித்தியாசமான படமாக இருந்தாலும், கொஞ்சம் அபத்தமாகவும் இருந்தது. இன்னும் புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்திருந்தால் முக்கிய படமாக அமைந்திருக்கும்.


ராஜதந்திரம் படத்தின் கதையும் திரைக்கதையும் ஒரு நாவலைப் போல பரபரப்பாக இருந்தது. ஆனாலும், அப்படி ஒரு படம் வெளிவருகிறது என்பது அந்தப் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் தெரியவே வந்தது.


மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டிய திலகர், தொப்பி, அகத்திணை ஆகிய படங்கள் ஓரளவிற்கு சராசரி படங்களுக்கும் மேலான படங்களாக அமைந்தன. படத்தில் நடித்த மற்ற முக்கிய நட்சத்திரங்களை விட நான் கடவுள் ராஜேந்திரனை முன்னிலைப்படுத்தியதால் இவனுக்கு தண்ணில கண்டம் படம் ஓரளவிற்கு ஓடியது.


எதிர்பார்த்த படங்கள், மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்கள் என எதுவுமில்லாத ஒரு சாதாரண மாதமாகவே மார்ச் மாதம் கடக்க உள்ளது.


ஆனாலும், சிறிய படங்களை எடுத்தவர்களும் தங்கள் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தொடர்ந்து விளம்பரப்படுத்திதான் வருகிறார்கள். உண்மையிலேயே குறைந்த செலவில ஏதாவது ஒரு படம் எடுக்கப்பட்டிருந்து, அந்தப் படத்திற்கு ரசிகர்கள் வந்திருந்தால் மார்ச் மாதம் வெளிவந்த 31 படங்களில் 3 படங்களாவது தப்பித்திருக்கும். ஆனாலும், ஒரு படம் கூட பேர் சொல்லக் கூடிய படமாக இல்லாதது வருத்தமே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in