ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் பக்தி படங்களுக்கு மவுசு இருந்தது. ஆடி, மார்கழி மாதங்களில் பக்தி படங்கள் வரும். கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் பக்தி படம் வரும். இப்போது அதிகம் வருவதில்லை. சின்னத்திரையிலேயே பக்தி தொடர்கள் ஒளிபரப்பாவதால் பக்தி திரைப்படங்களுக்கு வரவேற்பு இல்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஸ்ரீபாலாஜி மகிமை என்ற பக்தி படம் வர இருக்கிறது. எம்.வி.கோபால் ராம் படத்தை இயக்கி ஸ்ரீபாலாஜியின் பக்தராக நடிக்கிறார். சாய் கிரண் ஸ்ரீபாலாஜியாக நடிக்கிறார். இவர்கள் தவிர டெல்லி கணேஷ், வையாபுரி, விச்சு, விஜய்பாலாஜி, தமிழ்மணி உள்பட பலர் நடிக்கிறார்கள். பார்த்தசாரதி, ராஜ் பாஸ்கர் இசை அமைத்துள்ளனர். ராம் யோகா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா ராஜ்பவனில் நடந்தது. கவர்னர் ரோசையா பாடல்களை வெளியிட்டார்.
"கடவுள் எல்லா மனிதர்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிப்பார். அதை சிலர் தவற விடுகிறார்கள், சிலர் சரியாக பயன்படுத்துகிறார்கள். சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். கடவுள் கொடுக்கும் அந்த வாய்ப்பு என்ன? அதை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள். இதில் கடவுளின் பங்கு என்ன என்பதை பக்தி மணம் கமழ, ஸ்ரீபாலாஜியின் மகிமைகளோடு சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் எம்.வி.கோபால்ராம்.