Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என் நடனப்பாணியை புதுப்பிக்க விரும்புகிறேன் - நடன இயக்குனர் தினேஷ் குமார்

29 மார், 2015 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Choreographer-Dinesh-Kumar-Interview

'எனக்கு உண்மையிலேயே மேற்கத்திய நடனம்தான் நல்லா ஆட வரும்; குத்துப்பாட்டுக்கு அவ்வளவா ஆட வராது!' சிரித்துக் கொண்டே பேசத் துவங்குகிறார் நடன இயக்குனர் தினேஷ். ஆனால், 'ஆல் தோட்ட பூபதி'யாக விஜய்யை ஆட்டம் போட வைத்தது; 'ஒத்த சொல்லால...' பாட்டுக்கு தேசிய விருது பெற்றது; 'ஜில்லா விட்டு...' பாடலுக்கு, புது நடனப்பாணியை அறிமுகப்படுத்தியது; 'ஊதா கலரு ரிப்பன்...' பாட்டில் காமெடியை கலந்தடித்தது என, இவரின் அசத்தல் அடையாளங்கள் அத்தனையுமே குத்துப்பாடல்கள் தான்!


கிட்டதட்ட எல்லா முன்னணி ஹீரோக்களையும் 'ஆட்டி' வைத்தவர், தற்போது 'ஒரு குப்பைக்கதை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். ஆனால், எதைப்பற்றி கேட்டாலும், நடனத்திலேயே வந்து முடிகிறது இவரின் பேச்சு!


என்ன திடீர்ன்னு ஹீரோ அவதாரம்?


இது, ரொம்ப தயக்கத்துக்கப்புறம் நான் எடுத்த முடிவு! நாலு பேரை அடிக்கணும்; ஹீரோயிசம் காட்டணும்னா, 'மாட்டேன்'னு சொல்லியிருப்பேன். ஏன்னா, அது எனக்கு 'செட்' ஆகாது! ஆனா, இது ஒரு குடும்ப கதை. முக்கால்வாசி படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு! பிரபுதேவா மாஸ்டரும், ராஜூசுந்தரம் மாஸ்டரும், முக பாவனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க; அவங்க குரூப்ல இருந்ததனால, அந்த அனுபவம், நடிப்புக்கு ரொம்ப உதவியா இருந்தது.


உங்களின் 'டிரண்ட் செட்டிங்' நடனப்பாணி பற்றி?


அது ஒரு சின்ன முயற்சிதான்! 'குத்துப்பாட்டுக்கு மெதுவா ஸ்டெப் போட்டா எப்படி இருக்கும்?'னு யோசிச்சேன். அது இவ்வளவு பெரிய 'ஹிட்' ஆயிடுச்சி!


ஆனா, இப்ப அதை நிறைய பேர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! அதனால, நான் என் நடனப்பாணியை புதுசா மாத்துறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்!


சந்தோஷம்! ஆனா, 'பாட்டும், நடனமும் படத்துக்கு அவசியமில்லை'ன்னு, ஒரு கருத்து உருவாகியிருக்கே...


(சிரிக்கிறார்) பாட்டையும், நடனத்தையும் கொண்டாடுற ரசிகர்கள், இங்கேதான் அதிகம். ஹாலிவுட்டை பொறுத்தவரைக்கும், படம் தனி, பாடல்கள் தனின்னு பிரிச்சு வைச்சு கொண்டாடுவாங்க! நாம, ஒண்ணா வைச்சு பார்த்து ரசிக்கிறோம். இந்த ரசனை இப்போ வரைக்கும் உயிர்ப்போடதான் இருக்கு; இனிமேலும் நிச்சயம் இருக்கும்!


ஹீரோ அறிமுகப் பாடல், டூயட் பாடல், குத்து பாடல் - எது உங்க பொறுமையை சோதிக்கும்?


நான் நடனம் அமைச்ச பாடல்கள், பெரும்பாலும் 'லைவ்'வான பாடல்கள்தான்; அதுல பெரிய சிரமம் ஒண்ணும் இருக்காது! காட்சிகளை இணைச்சு பண்ற 'மான்டேஜ்' பாடல்கள்தான், கொஞ்சம் சிரமம் கொடுக்கும். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துல, 'யார் இந்த பெண்தான்...' பாட்டு, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துல 'ஊதா கலரு ரிப்பன்...' பாட்டு, இதெல்லாம், என்னோட நகைச்சுவை உணர்வுக்கு சவால் தந்த பாடல்கள்!


முன்னணி நட்சத்திரங்கள் உடனான அனுபவம்?


விஜய் சாருக்கு என்ன 'ஸ்டெப்' போட்டாலும், உடனே ஆடிடுவாரு. 'பிரேக் டைம்'ல கூட, நாங்க என்ன பண்றோம்னு ஆர்வமா கவனிப்பாரு. அவருக்கு


நடனம் அமைக்கிறது, கொஞ்சம் சவாலான விஷயம்! அஜித் சாரும் நல்ல டான்ஸர். சமீபத்துல, வீரம் படத்துக்கு மூணு பாட்டு பண்ணினேன். அவரைப் பொறுத்தவரைக்கும், அவரு எந்த 'ஸ்டெப்' போட்டாலும் அது 'மாஸ்'தான்! கதாநாயகிகள்ன்னு பார்த்தா, சிம்ரன்தான், என் ஆல் டைம் பேவரைட்!




'டிவி' நடன நிகழ்ச்சிகள்ல, உங்களை பார்க்க முடியறதில்லையே...?


என்ன பண்றது... சினிமா வேலைகளுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. சிம்ரன் கூட, ஒரு நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி ஒரு தடவை கேட்டாங்க; ஆனா, நேரம் கிடைக்கலை; ஸாரி மேடம்!


புதுமுயற்சிகள் ஏதாவது?


ஒரு படம் இயக்கணும்! இளம் வயது ஹீரோ, ஹீரோயின் இல்லாம, வயசானவங்களை வைச்சு ஒரு கதை ரெடி பண்ணி வைச்சிருக்கேன். பார்ப்போம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in