ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வி.ஜி.பி.சந்தோசம் நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். சமீபகாலமாக அவரை சினிமா வட்டாரங்களில் காண முடிவதில்லை. ஆனால் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ரு படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அதோடு, 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எங்களது விஜிபி தங்க கடற்கரையில் நிறைய படப்பிடிப்புகள் நடக்கும்.அதனால் நாங்கள் அடிக்கடி அங்குள்ள லொகேசன்களை புதிது புதிதாக மாற்றிக்கொண்டே இருந்தோம். அதனால் அங்கு சினிமாக்காரர்கள் அதிகமாக வரத் தொடங்கினர். அவர்களைப்பார்க்க மக்கள் கூட்டமும் அலைமோதியது.
ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களே தங்களது படங்களின் படப்பிடிப்பை தங்க கடற்கரையில் நடத்துவதில் ஆர்வம் காட்டினர். அப்படி படப்பிடிப்புகள் அதிகமாக அங்கு நடைபெற்றதால் விஜிபி கோல்டன் பீச் என்பது பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.