ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இதுவரை நடித்த ஆறு படங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்த சிவகார்த்திகேயனின் ஏழாவது படமாக வெளியானது - காக்கி சட்டை. உலகமெங்கும் 700க்கும் அதிகமான திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 370 திரையரங்குகளுக்கும் மேலாகவும் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை காமெடியை மட்டுமே நம்பிய சிவகார்த்திகேயன், காக்கி சட்டை படத்தில் டான்ஸ், ஃபைட், காமெடி என கலந்து கட்டி நடித்திருந்தார். சுருக்கமாக சொல்வது என்றால், தன்னால் முடிந்தளவுக்கு இப்படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்ற கருத்தே பரவலாக உள்ளது.
போலீஸ் படத்துக்கே உரிய பரபரப்பும், ஆக்ஷன் காட்சிகளும் முழுமையாக இல்லை என்றும், சிவகார்த்திகேயனின் பாணியிலான காமெடியும் முழுமையாக இல்லாமல் இருப்பதால் காக்கி சட்டை முழுத்திருப்தியைத் தரவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. முக்கியமாக காக்கி சட்டை பட விளம்பரங்களில் அவரை போலீஸ் கமிஷ்னர் ரேன்ஜுக்கு பில்ட் அப் செய்துவிட்டு அவரை கான்ஸ்டபிளாக நடிக்க வைத்திருப்பதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திருடன் போலீஸ் மற்றும் என்னை அறிந்தால் படங்களின் கலவையாக காக்கி சட்டை படத்தின் கதை இருக்கிறது என்ற விமர்சனமும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மொத்தத்தில் சூப்பர் என்று சொல்லப்படாமல், பார்க்கலாம்... போரடிக்கவில்லை என்ற கருத்தையே பெற்றுள்ளது.
அது சரி...இப்படம் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? பாக்ஸ் ஆபிஸைப் பொறுத்தவரை இப்படம் ஏமாற்றம் அளித்திருப்பதாகவே தகவல்கள் அடிபடுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் தேர்வு போன்ற காரணங்களால் இப்படம் வெளியான முதல்நாளிலேயே பல தியேட்டர்கள் ஃபுல்லாகவில்லை என்று கேள்வி. முதல்நாளில் தமிழகமெங்கும் 4 கோடிக்கும் குறைவாகவும், உலக அளவில் 7 கோடிக்கும் குறைவாகவும்தான் காக்கி சட்டை படம் வசூல் செய்திருக்கிறதாம்.
இந்த தகவல் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை வாங்க அட்வான்ஸ் கொடுத்திருப்பவர்களின் வயிற்றைக் கலக்கி இருக்கிறது. காரணம்... ரஜினி முருகன் படம் 40 கோடிக்கு பிசினஸ் ஆகி உள்ளது.