காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அஞ்சலி படத்தில் அவரது அண்ணன் ரிச்சர்டும் நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு ஷாலினி பிசியாகி விட்டபோதும், ரிச்சர்டுக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் படிப்பில் கவனம் செலுத்திய அவர், காதல் வைரஸ் படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து நாளை, யுகா என பல படங்களில் நடித்தபோதும், அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் இன்னமும் மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறார். அதனால் தற்போது தனது ரூட்டை மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறார் ரிச்சர்ட. குறிப்பாக, ஹீரோ வேசம் என்றபோதும், தன்னை கெட்டவனாக வெளிப்படுத்தும் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார் ரிச்சர்ட்.