ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.நாராயண திடீர் காலமான காரணத்தால் அவர் தற்போது நடித்துக் கொண்டிருந்த பல படங்கள் சிக்கலில் சிக்கியுள்ளது இதில் முக்கியமாக அல்லு அர்ஜுன் - த்ரிவிக்ரம் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் சன் ஆஃப் சத்யமூர்த்தி படமும் ஒன்று. இப்படத்தில் நாராயணாவை வைத்து பல காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டார்களாம். தற்போது அவர் காலமானதால் மீதமுள்ள காட்சிகளை எப்படி படமாக்குவது என்று குழம்பிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.
மீண்டும் நாராயணா நடித்த காட்சிகளை வேறு ஒரு காமெடியனை வைத்து படமாக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாம். இதனால் சன் ஆஃப் சத்யமூர்த்தி படம் வெளியாவத்தில் தாமதம் ஏற்படலாம் அதுமட்டுமில்லாமல் படத்தின் பட்ஜெட்டும் அதிகரிக்கும் என கூறிவிட்டார் இயக்குநர். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் சமந்தா, நித்யா மேனன் மற்றும் அத்ஹா ஷர்மா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.