ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் பரத்வாஜ், மேரி இவான்ஸ் வாடியா படத்தை அடிப்படையாக கொண்டு, ஜூலியா என்ற படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக, சஞ்சய் தத், அஜய் தேவ்கன் மற்றும் ஜெர்மன் நடிகை பிராங்கா பொடேன்டெ உள்ளிட்டோரை அணுகியிருந்தார். படத்தின் தயாரிப்பாளரான யூடிவி மோஷன் பிக்சர்ஸ், இறுதிநேரத்தில் சிறு மாற்றம் செய்ததையடுத்து, படத்தின் படப்பிடிப்பு துவங்காமலேயே இருந்தது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவக்க விஷால் பரத்வாஜ் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.