ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அதையடுத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது சாதகமாக சூழ்நிலை ஏற்படவிலலை. அதனால் அந்த படத்தை அப்படியே விட்டு விட்டு, தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ஒரு பக்க கதை என்ற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படத்தைப்போலவே இந்த ஒரு பக்க கதையும் ஒரு பக்காவான கதையில் உருவாகிறதாம். அதோடு, பெரிய அளவில் செலவு இல்லையாம். ஒரே இடத்தைச்சுற்றி நடக்கும் கதை என்பதால், சென்னையிலுள்ள அடையாறில் இந்த படத்துக்காக காலனி போன்று ஒரு செட்டை அமைத்து ஆரம்பத்தில் இருந்தே படமாக்கி வருகிறார்கள்.