ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜீத் நடித்துள்ள, ''என்னை அறிந்தால்'' படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''என்னை அறிந்தால்''. அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தன. சமீபத்தில் அந்த பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்தில் சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்று தருவதாக கூறியுள்ளனர். ஆனால் படத்திற்கு அந்தக்காட்சிகள் முக்கியம் என படக்குழு தெரிவிக்க இறுதியில் எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று கொடுத்துள்ளனர்.
படக்குழு அதிர்ச்சி
பொதுவாக 'யு' சான்று பெற்றால்தான் ஒரு படம் அரசு வரி விலக்குக்கு தகுதி பெற முடியும். ஆனால் என்னை அறிந்தால் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று கொடுத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரிவைசிங் கமிட்டி செல்ல முடிவு
இதனிடையே என்னை அறிந்தால் தயாரிப்பாளர், ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அங்கு யு சான்று பெற்று படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளார்.