கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
2014ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு நிறைவான ஆண்டாக அமைந்தது என்று சொல்ல முடியாது. 200 படங்களுக்கு மேல் வெளிவந்தது. ஆனால் அது சந்தோஷமான ஒன்றாக இல்லை. காரணம் வெற்றி பெற்றது பத்து படங்களுக்கும் குறைவானது. நஷ்டம் அடையாமல் தப்பித்தது 20 படங்கள் வரை இருக்கும். மீதமுள்ள 180 தயாரிப்பாளர்களும் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் கனவை இழந்துள்ளனர்.
திருட்டு விசிடி, இண்டர்நெட் டவுண்ட் லோட், தியேட்டர் கட்டணம் போன்றவை தொடர்ந்து திரைப்படத்துறையை மிரட்டிக் கொண்டிருக்கிறது. திரைப்பட சங்கங்களில் உள்ள ஈகோ பிரச்னைகளால் திரைப்படத்துறைக்கு நடைபெற வேண்டிய பல நல்ல காரியங்கள் நடக்காமல் போய்விட்டது.
ரசிகர்களை பொறுத்தவரை அவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய படங்களும் உண்டு. எதிர்பாராமல் சர்ப்பரைஸ் கொடுத்த படங்களும் உண்டு. திருட்டு விசிடி, இண்டர்நெட் டவுண்ட் லோடு இருந்தபோதும் நல்ல படங்களை தியேட்டருக்கு வந்து பார்த்து தங்கள் ஆதரவை சினிமாவுக்கு இன்னும் தந்து கொண்டிருக்கிறார்கள்.
2015ம் ஆண்டு திரைப்படத்துறைக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் நல்ல ஆண்டாக அமையும் அறிகுறிகள் தெளிவாக தெரிகிறது. 2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே அஜீத் நடித்த என்னை அறிந்தால். விக்ரம், ஷங்கரின் உழைப்பில் உருவாகி நிற்கும் பிரமாண்டம் ஐ, சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காக்கி சட்டை, விஷால் சவால்விடும் ஆம்பள, கார்திக்கின் கொம்பன் என பொங்கல் விருந்தோடு தொடங்குகிறது 2015ம் ஆண்டு.
அடுத்து கமல் நடித்த உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூம் 2 என்ற உலக நாயகனின் விருந்துகள் தொடரப்போகிறது. அடுத்து இரண்டு புதிய படங்களையும் அறிவித்து விடுவார். சிம்புதேவன், விஜய் கூட்டணியில் உருவாகும் படமும், விஜய், அட்லி இணையும் படமும் 2015 விருந்தாக அவரது ரசிகர்களுக்கு அமையும், அஜீத்தும் சிறுத்தை சிவாவுடன் இணையும் அடுத்த படத்தை பிப்ரவரியில் ஆரம்பித்து டிசம்பருக்கும் அவரும் தன் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவிடுவார். இன்ப அதிர்ச்சியாக சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட அறிவிப்பு வரலாம். லிங்கா போல அதுவும் 6 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு ரசிகனிடம் வரலாம்.
ஐ படத்துக்காக 2 வருடம் உழைத்த விக்ரம் இனி வருடத்துக்கு குறைந்தது 2 படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். பத்து எண்றதுக்குள்ள விரைவில் வர இருக்கிறது. அடுத்த படத்தையும் விரைவில் தொடங்குவார். சூர்யாவின் மாஸ் ரெடியாகிவிட்டது. அடுத்த படத்துக்கும் தயாராகிவிட்டார். விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் 2015ல் ரிலீசாகும். இப்படி இந்த ஆண்டு முழுக்க ரசிகனுக்கு விருந்துகள் காத்திருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து வருகிற 26ந் தேதி புதிய நிர்வாகிகள் பதவியேற்பார்கள். இரண்டு செயலாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்ல அறிகுறியாக தெரிகிறது. புதிய நிர்வாகிகள் சினிமா எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவார்கள் என்ற நம்பலாம். நடிகர் சங்க பிரச்னைகள் தீர்ந்து சங்க கட்டிடம் எழுப்பப்பட வேண்டும். சேம்பர் கட்டிவரும் இரண்டாவது வளாகம் தயாராக வேண்டும். மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு சென்னையில் சிலை அமைய வேண்டும். தேசிய விருதுகளில் தமிழ் படங்களின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும். இப்படி பல எதிர்பார்ப்புகளோடு 2015ம் ஆண்டை வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.