ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுமார் பத்து நண்பர்கள் சேர்ந்து ஐ ஸ்டுடியோஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற படக்கம்பெனியை தொடங்கி கப்பல் என்ற படத்தைத் தயாரித்தனர். வைபவ் கதாநாயகனாகவும், சோனம் பாஜ்வா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இவர் எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். கப்பல் படம் பிசினஸ் ஆகாமல் பல மாதங்கள் பெட்டியில் கிடந்தது. இந்த விஷயத்தை இயக்குநர் ஷங்கரிடம் சொல்லி கப்பல் படத்தை வாங்கிக்கொள்ளும்படி கேட்டனர். ஐ பட டென்ஷனில் இருக்கும் ஷங்கர் தற்போது கப்பல் படத்தை வாங்க இயலாது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், தன் உதவியாளரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு “வேண்டுமானால் அப்படத்தை நான் வாங்கி வெளியிடுவதுபோல் பப்ளிசிட்டி செய்து படத்தை பிசினஸ் செய்து கொள்ளுங்கள்” என்று கூறி உள்ளார். அதன்படி கப்பல் படம் நேற்று வெளியானது. கயல், மீகாமன், வெள்ளைக்காரதுரை என மேலும் சில படங்களும் வெளியாகின. நான்கு படங்களில் கப்பல் படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாம். தமிழகம் முழுக்க இதுவரை ஒரு கட்சி கூட ஹவுஸ்புல்லாகவில்லையாம். என்ன காரணம் என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். பாய்ஸ் படம் போல் கப்பல் படத்தில் ஆபாசம் அதிகம், தவிர கப்பல் படத்தின் டிவி விளம்பரங்களிலும் ஆபாச நெடி அதிகம் அடிக்கிறது. எனவே ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர கூச்சப்பட்டு வேறு படங்களைத்தேடிப்போய்விட்டனர். மொத்தத்தில் கவிழ்ந்தது கப்பல்.