பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தான் நமக்கு பூர்வீகம். ஐ.டி.ஐ., படிச்சு முடிச்சதும், சினிமா மோகம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. வீட்ல சொன்னா, ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைக்க போறதில்லை. அதான், சொல்லாம கொள்ளாம சென்னைக்கு பஸ் ஏறிட்டேன்! கடந்து வந்த வாழ்க்கையை, எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஒப்பிக்கிறார் சினிமா உலகில் 22 வருடங்களாக வலம் வரும் சீனியர் உதவி இயக்குனர் முத்துவடுகு.
சினிமாவில் முதல் கிளாப் அடித்த தருணம்?
சென்னைக்கு வந்ததுக்கப்புறம், பாலுமகேந்திரா சார் நம்மளை பார்த்துட்டாருன்னா போதும். என்கூட சேர்ந்து நீ வேலை பார்த்தே தீரணும்னு அடம் பிடிப்பாருங்கற நினைப்புல, முதல்ல அவர் வீட்டுக்குப் போனேன். அங்க போனா, செம கூட்டம்! அப்புறம், கங்கை அமரன், டி.ராஜேந்தர் வீடுன்னு வரிசையா படையெடுத்தேன். நம்ம கட்டம் சரியா இல்லாததுனால, எதுவும் சரியா அமையலை. ரோடு வேலை, வெல்டிங் வேலைனு ஒரு ரெண்டு வருஷம் பாதையை மாத்திக்கிட்டேன். அப்பதான், காதலன் படத்துல வேலை பார்க்குற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, இயக்குனர் வசந்தபாலன் கூட ஓடிட்டு இருக்கறேன்!
மின்னல் வேகத்தில், குறும்பட இயக்குனர்கள் வெள்ளித்திரை இயக்குனர்களாகும் போது...
நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. இன்னைக்கு தொழில்நுட்பம் நிறைய மாறிடுச்சு. ரசிகர்களோட ரசனையில பெரிய வித்தியாசம் வந்திருக்கு. சினிமாவுல எவ்வளவு திறமையா இருந்தாலும், வாய்ப்பு கிடைச்சாதான் நம்மளை நாம நிரூபிக்க முடியும். அந்த வாய்ப்பு சிலருக்கு சீக்கிரம் கிடைக்கும். சிலருக்கு கொஞ்சம் தாமதமாகும். அவ்வளவுதான்!
ஒருவேளை, வாய்ப்புகள் இன்னும் தள்ளிப்போயிட்டே இருந்தா?
நம்பிக்கையோட இருக்கறவன் என்னைக்காவது ஒருநாள் நிச்சயம் ஜெயிப்பான். இதையும் மீறி எனக்கு வாய்ப்பு கிடைக்காம போச்சுன்னா, சினிமாவுல ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டு, அந்த வருமானத்துல வாழ்க்கையை ஓட்டிடுவேன்!
உங்க படங்கள் எப்படிப்பட்டதா இருக்கும்?
என்னைப் பொறுத்தவரைக்கும், காமெடி, சண்டை, பாட்டு, சென்டிமென்ட்னு, அத்தனை அம்சங்களும் கலந்த காக்டெய்ல்தான் ரசிகனை சுண்டி இழுக்கும். என் படங்கள், அப்படித்தான் இருக்கும்!
நீங்கள் இயக்க ஆசைப்படும் ஹீரோ - ஹீரோயின்கள்?
இப்பவும், எப்பவும் ரஜினி சார் மட்டும்தான்! ஹீரோயின் ஒரு விஷயமே இல்லை. யாரா இருந்தாலும், அசத்திடலாம்!
இப்போதைக்கு என்ன ஆசை?
உடனடியா ஒரு படம் பண்ணணும். அப்பதான் பார்க்கறவங்க
எல்லாம், இன்னுமா படம் பண்ணாம இருக்கீங்கன்னு, கலாய்க்காம இருப்பாங்க!