Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, விஜய், அஜீத்தை எல்லாம் முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

12 டிச, 2014 - 18:17 IST
எழுத்தின் அளவு:

பிரபல பத்திரிகையான் போர்ப்ஸ் இந்தியா, இந்தியாவின் டாப்-100 பிரபங்களின் பட்டியலை வௌியிட்டுள்ளது. இதில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், அஜித்தை எல்லாம் முந்தியுள்ளார். ''ரோஜா'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையும் கடந்து ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்து ஆஸ்கர் விருது பெற்றார். தற்போது இந்தியாவின் நம்பர்-1 இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஹ்மான்.


இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, இந்தியாவின் டாப்-100 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வௌியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்த பட்டியலை வௌியிட்டுள்ளது. பிரபலங்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்தளவு பிரபலமாக இருக்கிறார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வௌியிடப்படுகிறது. இதில் இந்தாண்டு நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். அவர் ஓராண்டில் ரூ.244.50 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானுக்கு அடுத்தப்படியாக அமிதாப்பச்சனும்(ரூ.196.75), 3வது இடத்தில் ஷாரூக்கானும்(ரூ.202.40 கோடி), 4வது இடத்தில் தோனியும்(ரூ.141.80 கோடி), 5வது இடத்தில் அக்ஷ்ய் குமாரும்(ரூ.172 கோடி) உள்ளனர்.


தென்னிந்திய பிரபலங்களை பொறுத்தமட்டில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 30வது இடத்தில் உள்ளார். தமிழ் நடிகர்களை பொறுத்தமட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 13வது இடத்தில் இருக்கிறார். விஜய் 41வது இடத்திலும், ரஜினி 45வது இடத்திலும், அஜித் 51வது இடத்திலும் இருக்கின்றனர். ரஜினி, விஜய், அஜித்தை காட்டிலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 39வது இடத்தில் இருக்கிறார். அதேசமயம் இவர்கள் எல்லாவற்றையும் விட ஏ.ஆர்.ரஹ்மான் (13வது இடம்) முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in