ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நட்சத்திரங்களுக்கு எப்போதுமே நிழலாக இருப்பவர்கள் அவரது உதவியாளர்கள்தான். கார் டிரைவர், மேக்கப்மேன், ஹேர் டிரஸ்ஸர், காஸ்ட்டியூம் உதவியாளர், தனி உதவியாளர் என அவர்களைச் சுற்றி எப்போதுமே ஐந்தாறு பேர் இருந்து கொண்டேயிருப்பார்கள். நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள்தான் அந்த நடிகைகளின் சமயங்களில் பாதுகாவலர்களாகவும் செயல்படுவார்கள். முன்பெல்லாம் நடிகைகளின் கூட இருப்பவர்கள் யார் என்பதும் கூடத் தெரியாது. விழாக்களுக்கெல்லாம் ஒரே ஒரு உதவியாளருடன் மட்டும்தான் வருவார்கள். படப்பிடிப்புகளில் அவர்கள் எல்லாம் இருந்தால் கூட அவர்களுடைய புகைப்படங்கள் எந்த பத்திரிகையிலும் வெளிவராது. சில நடிகைகளே அதை விரும்பவும் மாட்டார்கள்.
தன்னுடன் இருப்பவர்களையும் மரியாதையுடன் நடத்துபவர்களில் அஜித்தான் முதலிடத்தில் இருக்கிறார் என திரையுலகினரே சொல்வார்கள். அவருடைய பணியாளர்களுக்கென தனியாக சென்னையில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுகளையும் ஏற்றிருக்கிறார். அவரைப் போல அடுத்து நடிகை சமந்தா செயல்படுகிறார் எனத் திரையுலகினர் சொல்கிறார்கள். நேற்று சமந்தாவின் உதவியாளரான ஆர்யா என்பவருக்குப் பிறந்தநாள். அவருடன் நட்பாகத் தோள் மீது கை போட்டுள்ள புகைப்படத்தை டுவிட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டு, அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார் சமந்தா.
அதில், “எனது உதவியாளர் ஆர்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் என்னுடைய சகோதரரைப் போன்றவர். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். லவ் யூ,” என அதில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பரந்த மனசை அவருடைய ரசிகர்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்.