ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானவர் மறைந்த சில்க்ஸ்மிதா. ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான வேடங்களில் மட்டுமே நடித்தபோதும், ஒருகட்டத்தில் சிவாஜியுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து நின்றார். அதோடு பிரபுவுக்கு ஜோடியாகவும் சில படங்களில் நடித்தார். அவர் இறந்த பிறகு அவரது இடத்தை நிரப்ப எந்த நடிகையும் வரவில்லை.
ஆனால், கழுகு படத்தில் நடித்த பிந்துமாதவியை பார்த்ததும் சில்க் சாயலிலேயே இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப ஒரு நடிகை வந்து விட்டார் என்று அவரை ஜூனியர் சில்க் என்றே கோடம்பாக்கத்தில் அழைத்து வருகின்றனர். ஆனபோதும், அப்படி தன்னை அழைக்கும்போது சந்தோசமாக எடுத்துக்கொள்ளும் பிந்துமாதவி, அவர் பாணியில் கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்து வந்தார்.
இந்த நிலையில், சமீபகாலமாக அவரது மார்க்கெட் டல்லடிப்பதால், இப்போது சில்க் பாணியில் நடிக்க சம்மதம் சொல்லி வருகிறார் பிந்து. மேலும், நான் தமிழில்தான் குடும்ப நடிகை என்கிற இமேஜை காப்பாற்றி வருகிறேன். ஆனால், தெலுங்கில் ஆரம்பத்தில் இருந்தே கிளாமர் வேடங்களில் நடித்திருக்கிறேன். அதனால் மீண்டும் கிளாமராக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று புதிதாக கதை கேட்டிருக்கும் சில படங்களில் கவர்சசி அவதாரம் எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.
இதையடுத்து, பிந்துமாதவியின் பெயருக்கு முன்பு ஜூனியர் சில்க் என்ற பட்டத்தை கொடுக்கவும் சில டைரக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.