ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரையுலகில், நடிகர், இயக்குனராக இருந்த பிரபுதேவா, "வாண்டட்" படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில், இயக்குனராக அறிமுகமானார். வாண்டட் படம், போனி கபூரின் நிறுவனம் தயாரித்தது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், போனி கபூர், பிரபுதேவாவை அணுகி, தன்னுடைய பேனரில், மீண்டும், ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டதற்கு, பிரபுதேவா, தான் தற்போது பிசியாக இருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு தான் கமிட் ஆகி உள்ளதால், தங்களது பேனரில் படம் தயாரித்து தர முடியாது என்று கூறியுள்ளார். பிரபுதேவா, தற்போது தன் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள ஆக்ஷன் ஜாக்சன் பட புரோமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன்பின் சிங் இஸ் பிளிங் படத்தின் சூட்டிங்கை விரைவில் துவக்க உள்ள பிரபுதேவா, பாலாஜியின் அடுத்த பட வேலைகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.